திருவாரூர் மாவட்டத்தில் இது வரை 3.29 லட்சம் பேருக்கு விரி வான மருத்துவக் காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட் டுள்ளது என ஆட்சியர் தெரிவித் துள்ளார்.
திருவாரூர் ஆட்சியர் அலுவ லகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் குறித்த கூட்டம் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
பின்னர் ஆட்சியர் கூறியது:
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் மொத்தம் 1,450 மருத் துவ மற்றும் அறுவை சிகிச்சை கள், 38 பரிசோதனைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 154 தொடர் சிகிச்சைகள், 8 உயர் அறுவை சிகிச்சைகள் சேர்க்கப் பட்டுள்ளன. இந்த திட்டத்தில் வரைமுறைப்படுத்தப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகள் அனைத்திலும் அளிக் கப்பட்டுள்ளன. மேலும், திருவா ரூர் மாவட்டத்தில் இதுவரை 3,29,014 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங் கப்பட்டுள்ளது என்றார்.
பின்னர், 25 பேருக்கு முதல் வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் மற்றும் பிரதமரின் காப்பீட்டு திட்டத்துக்கான அடையாள அட்டைகளை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சி யில், சுகாதாரத் துறை இணை இயக்குநர் மருத்துவர் என்.செல்வகுமார், குடும்ப நல துணை இயக்குநர் டாக்டர் உமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago