மலுமிச்சம்பட்டி அரசுப் பள்ளிக்கு கட்டிடங்களை கட்டித் தரும் வாக்கரூ :

By செய்திப்பிரிவு

கோவை மலுமிச்சம்பட்டியில் அரசுப் பள்ளிக்கு கட்டிடங்களை வாக்கரூ ஃபவுண்டேஷன் கட்டித் தந்துள்ளது.

வாக்கரூ குழும நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூக பொறுப்புறுதி பிரிவான வாக்கரூ ஃபவுண்டேஷன், கோவை மலுமிச்சம்பட்டியில் வசதி குறைவான குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, கோவை மாவட்ட கல்வித்துறையோடு மூன்று ஆண்டுகளுக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. சமீபத்தில் மலுமிச்சம்பட்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வகுப்பறைகளையும், மதிய உணவு தயாரிப்புக்கான கூடத்தையும் ரூ.50 லட்சம் திட்ட மதிப்பில் வாக்கரூ கட்டித் தந்திருக்கிறது.

வாக்கரூ குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் விகேசி நெளஷாத் கூறும்போது, ‘‘கடந்த பல ஆண்டுகளாவே உள்ளூர் சமூகங்களின் மேம்பாட்டுக்கு தீவிரமான பங்களிப்பை நாங்கள் செய்து வருகிறோம். கற்றல் சூழலும், உட்கட்டமைப்பு வசதிகளும் ஒரு குழந்தையின் வளர்ச்சி பருவத்தில் இன்றியமையாத அம்சங்கள். மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் நான்கு வகுப்பறைகள், ஒரு மதிய உணவு தயாரிப்புக் கூடம் ஆகியவற்றுக்கான கட்டுமானப் பணிகளுக்கு ஆதரவை வழங்கியிருப்பதன் மூலம், அங்கு அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுவதற்கு வாக்கரூ முக்கிய பங்காற்றியிருக்கிறது’’ என்றார்.l

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE