சேலத்தில் அதிகரிக்கும் கரோனா நேற்று ஒரே நாளில் 69 பேர் பாதிப்பு :

சேலம் மாவட்டத்தில் நேற்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மீண்டும் 69 ஆக அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த 14-ம் தேதி கரோனா பாதிப்பு 52 ஆக இருந்த நிலையில், 15-ம் தேதி 62 ஆக திடீரென அதிகரித்தது. தொடர்ந்து 16-ம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 69 ஆக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 63 ஆக குறைந்தும், நேற்று மீண்டும் தொற்று பாதிப்பு 69 ஆகவும் அதிகரித்தது.

இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 16 பேரும், நகராட்சிகளில் மேட்டூரில் 6 பேர், நரசிங்கபுரத்தில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வட்டாரங்களில் சங்ககிரியில் 9, மேச்சேரியில் 7, ஓமலூரில் 6, தாரமங்கலம், எடப்பாடியில் தலா 5, ஆத்தூரில் 4, வாழப்பாடியில் 2, பனமரத்துப்பட்டி, தலைவாசல், ஏற்காடு, காடையாம்பட்டி, கொளத்தூர், நங்கவள்ளி, சேலத்தில் தலா ஒருவர் என மாவட்டம் முழுவதும் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE