தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பொன்காடு ஆதிதிராவிடர் தெருவில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்துத் தர வேண்டும், குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என வலியுறுத்தி 30 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர், பேராவூரணியில் ஆவணம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார், வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, அவர்கள் பொன்காடு ஆதிதிராவிடர் தெருவுக்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர், இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், ஒரு மணிநேர மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago