வியாபாரிகள் வீட்டில் ஆவணமின்றி பதுக்கியிருந்த 500 நெல் மூட்டைகள் பறிமுதல் :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பாச்சூரை அடுத்த கருப்பட்டிப்பட்டி கிராமத்தில் நெல் மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, முதுநிலை மண்டல மேலாளர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் துணை மேலாளர் பி.முத்தையா, கண்காணிப்பாளர் ஜெ.செந்தில்வேல், ஒரத்தநாடு வட்டாட்சியர் பி.சீமான், வடக்கூர் கிராம நிர்வாக அலுவலர் பா.சக்திவேல் ஆகியோர் கருப்பட்டிப்பட்டி கச்சார் தெருவில் உள்ள நெல் வியாபாரிகளான சகோதரர்கள் எஸ்.காமராஜ், எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான வீட்டில் நேற்று மாலை ஆய்வு செய்தனர். இதில், அங்கு உரிய ஆவணங்களின்றி 500 நெல் மூட்டைகள் இருப்பதைக் கண்டறிந்து, பறிமுதல் செய்தனர்.

பின்னர், நெல் மூட்டைகளை 3 லாரிகளில் ஏற்றி பிள்ளையார்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு கொண்டு சென்றனர். நெல் வியாபாரிகளால் உரிய ஆவணங்களின்றி பதுக்கிவைக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்