வெள்ளாளங்கோட்டையில் 21 சிசிடிவி கேமராக்கள் திறப்பு :

கோவில்பட்டி: கயத்தாறு அருகே வெள்ளாளங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஊர் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்ட 21 சிசிடிவி கேமராக்களை எஸ்.பி. ஜெயக்குமார் திறந்து வைத்தார். இந்த சி.சி.டி.வி கேமராக்களை அங்குள்ள மாரியம்மன் கோயிலில் உள்ள டிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

எஸ்பி பேசும்போது, ‘‘தற்போது சி.சி.டி.வி கேமரா காலத்தின் கட்டாயமாக உள்ளது. சி.சி.டி.வி கேமராக்கள் குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும், குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கும் பெரிதும் உதவியாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5,000 சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

தொடர்ந்து, கயத்தாறு அருகே செட்டிகுறிச்சியில் காவல்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை எஸ்.பி. திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன், கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, உதவி ஆய்வாளர்கள் அந்தோணி திலிப், பால், வட்டாட்சியர் பேச்சிமுத்து, செட்டிக்குறிச்சி ஊராட்சி தலைவர் கிருஷ்ணசாமி, வெள்ளாளங்கோட்டை ஊராட்சி துணைத் தலைவர் பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செட்டிக்குறிச்சி புறக்காவல் நிலையம் அவ்வூருக்கு மட்டுமின்றி சுற்று வட்டார கிராம பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தில் காவல்துறையினர் 24 மணி நேரமும் இருப்பார்கள். பொதுமக்கள் தங்களது புகார்களை புறக்காவல் நிலையத்திலேயே கொடுத்து, தங்களது குறைகளை தீர்த்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும், என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE