கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் - நிறுவனர் தினம் கொண்டாட்டம் : மாணவர்களுக்கு உதவித்தொகை, பரிசுகள் வழங்கல்

கோவில்பட்டி கே.ஆர் குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு நிறுவனர் கே.ராமசாமி மணிமண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அவரது உருவப்படத்துக்கு கே.ஆர் குழுமம் மற்றும்கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், செயலாளர் சங்கரநாராயணன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஷண்மதி, நித்திஷ்ராம், கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர்செ.ராஜு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல் தலைமை வகித்தார். முதல்வர் கே.காளிதாச முருகவேல் முன்னிலை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், சென்னை அண்ணா பல்கலைக்கழக கிரிஸ்டல் குரோத் மைய நிறுவன இயக்குநருமான பேராசிரியர் பி.ராமசாமி, தொழில்நுட்பம் மற்றும் சமூகம் என்ற தலைப்பில் இணையவழியில் பேசினார்.

மாணவர்களின் திறமை அடிப்படையில் 2 மாணவர்களுக்கும், தகுதிசார் அடிப்படையில் 4 மாணவர்களுக்கும், விளையாட்டு அடிப்படையில் 10 மாணவர்களுக்கும் கே.ராமசாமி நினைவு உதவித் தொகைக்கான தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்களின் சைக்கிள் பேரணி எட்டயபுரத்திலிருந்து புறப்பட்டு, நிறுவனர் மணிமண்டபத்தை வந்தடைந்தது.

இலவச உடல்நலப் பரிசோதனை முகாம், நடமாடும் உடல்நலப் பரிசோதனை முகாம், கரோனா3-வது அலை தடுப்பு குறித்தவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்பட்டியில் அரசு தலைமை மருத்துவமனையில் அன்னதானம் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கைப்பந்து போட்டி, கருத்தரங்கம், விவாத மேடை, விநாடி-வினா நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் என்.இ.சி மிஸ்ட்ரல் டெக்னோபேஷன் மையத்தை பெங்களூரு மிஸ்ட்ரல் சொல்யூஷன்ஸ் நிறுவனத் தலைவர் அனீஷ் அஹமத் தொடங்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராஜீ ராமச்சந்திரா பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE