தூத்துக்குடி கடற்கரையில் குப்பைகளை அகற்றிய கடலோர காவல் படையினர் :

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் சேகரமான குப்பைகளை அகற்றும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர்.

உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை கடற்கரைகளில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடலோர காவல் படை தூத்துக்குடி பிரிவு சார்பில், டிஐஜி அரவிந்த் சர்மா தலைமையில் தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணி நடைபெற்றது. கடலோர காவல் படையை சேர்ந்த 120 வீரர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

மொத்தம் 67 பைகளில் ஏறத்தாழ ஒரு டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE