ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் : பாதுகாப்பு கேட்டு எஸ்.பி. அலுவலகத்தில் மனு :

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் தரப்பில் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து துளசி சமூக அறக்கட்டளை நிறுவனர் தனலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூலமாக பெண்களுக்கு பல உதவிகள் கிடைத்து வருகிறது. அதன் அடிப்படையில் மூடியிருக்கும் அந்த ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தோம்.

இதை விரும்பாத ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பேட்டியளித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்த அவர் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத சூழல் உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கருத்தை கேட்பதுபோல ஆதரவாளர்களது கோரிக்கைகளையும் அரசு கேட்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது தொடரும் அராஜக நடவடிக்கைகளை தடுக்க கோரியும், மிரட்டியவர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்