குரும்பூர் அருகே வேனில் கடத்திய - ரூ.2 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் :

வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில், குரும்பூர் காவல் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு நாலுமாவடி பணிக்கநாடார் குடியிருப்பு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். வேனில் 264 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேன் ஓட்டுநரிடம்விசாரித்தபோது, அவர் கோயம்புத்தூர் உடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி (46) என்பதும், அங்கிருந்துபணிக்கநாடார் குடியிருப்புமேற்கு தெருவைச் சேர்ந்த மகேஷ்வரன் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருட்களை கொண்டு வந்ததும் தெரியவந்தது. சுடலைமணியை போலீஸார் கைது செய்து, சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப்பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேனை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மகேஷ்வரனை தேடிவருகின்றனர். இதுகுறித்து குரும்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில்புகையிலைப் பொருட்கள் கடத்தல்மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 1,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு1,146 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.66,25,000 மதிப்புள்ள 22,200 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE