சிவகங்கையில் பாஜக பிரமுகர் கொலை வழக் கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை அருகே கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஒப்பந்ததாரரும், பாஜக மீனவர் அணி மாவட்டத் துணைத் தலைவருமான முத்துப்பாண்டி (45), சிவகங்கை நெல்மண்டி தெருவில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் அருகேயுள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்த முத்துப் பாண்டியை, ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸார் வழக்குப் பதிந்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீஸார் விசாரணையில் தெரிய வந்த விவரம்: சிவகங்கை அருகே வைரவன் பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (29). இவர் கல்லுப்பட்டியைச் சேர்ந்த அதிமுக சிவகங்கை ஒன்றிய முன்னாள் செயலாளர் பொன்னுச்சாமியை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக இருந்தார். இந்நிலையில் அந்த வழக்கில் 2012 ஜூலை 9-ம் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக மோட்டார் சைக்கிளில் செல்வம் வந்தபோது, சாமியார்பட்டி அருகே பழிக்குப் பழியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், முத்துப்பாண்டி குற்றவாளி யாகச் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் செல் வம் கொலைக்கு பழிக்குப் பழியாக முத்துப் பாண்டியை, செல்வத்தின் உறவினர்கள் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய வைரவன்பட்டியைச் சேர்ந்த சுகுமார் (27), பால்பாண்டி (22), செல்வேந்திரன் (60) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago