தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டிகேஎம் 9 என்ற சன்னரக நெல்லை விவசாயிகள் பரவலாக சாகுபடி செய்து வருகின்றனர். இந்த டிகேஎம் 9 ரக அரிசி பழுப்பு நிறத்தில் இருக்கும் என்பதால், பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இந்த அரிசியை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால், இந்த ரக அரிசி தேக்கமடைந்ததைத் தொடர்ந்து, டிகேஎம் 9 ரக நெல் கொள்முதலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தவிர்த்து வந்தது.
இந்நிலையில், விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், தற்போது டிகேஎம் 9 ரக நெல்லை கொள்முதல் செய்யலாம் என நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ராஜாராமன், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “டிகேஎம் 9 ரக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இதை தனியாக கணக்கு பராமரித்து, தங்கள் மண்டலங்களிலேயே அரைவை செய்து, பொது விநியோகத் திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago