மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை மூலம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்த்தல், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை என்ற பொது கருத்தில் கரூர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டி, 8, 9, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நெகிழி கழிவு மேலாண்மையில் நெகிழியை குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்வதற்கான வழிமுறைகள். பள்ளி நிகழ்ச்சிகளில் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் நீக்க புதிய சிந்தனைகள், நெகிழி பயன்பாட்டுக்கு பதிலாக மாறுபட்ட பொருட்களை பயன்படுத்தி நெகிழி மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறைத்தல் ஆகிய தலைப்புகளும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நெகிழி மறுசுழற்சிக்கான புதிய பொருளாதார வாய்ப்புகளை கண்டறிதலில் பொதுமக்களின் பங்கு, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் மூலம் ஏற்படும் மாசுபடுதலை குறைத்தலில் இளைஞர்களின் பங்கு, புதுமையான படைப்பாற்றல் மூலம் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களுக்கான மாறுபட்ட பொருட்களை கண்டறிதல் ஆகிய தலைப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுரைகளை, பள்ளித் தலைமையாசிரியர் வழியாக ஆக.31-க்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago