திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தமிழர்கள் உட்பட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தாயகம் திரும்ப மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது, டெல்டாவில் நடைபெறும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர், உரம், யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது. அதை சரிசெய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்டப்பேரவை கூட்டத் தொடரில், தமிழக அரசின் நிதி பற்றாக்குறை குறித்து மாநில நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிதி பற்றாக்குறையை சரிசெய்யவும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago