மானாமதுரையில் 21 நிறுவனங்களை வெளியேற்றிய சிப்காட் நிர்வாகம் :

By செய்திப்பிரிவு

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் பல ஆண்டுகளாக புதிய தொழில்கள் தொடங்காத 21 நிறுவனங்களை சிப்காட் நிறுவனம் வெளியேற்றியது.

மானாமதுரையில் 1982-ல் 300 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இங்கு 95 நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் பல நிறுவனங்கள் முடங்கின.

இந்நிலையில் பல ஆண்டு களாக முடங்கிய நிறுவனங்களை வெளியேற்றிவிட்டு, புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்புத்தர சிப்காட் முடிவு செய்துள்ளது. இதுவரை 10 நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. மேலும் 11 நிறுவ னங்கள் வெளியேற உள்ளன. தொடர்ந்து 74 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

அதேபோல் சிவகங்கை அருகே அரசனூரில் சிப்காட் தொழிற்பேட்டை ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட் டுள்ளது.

இதற்காக இலுப்பகுடி குரூப்பில் 605.39 ஏக்கர், கிளாதரி குரூப்பில் 62 ஏக்கர், அரசனூர் குரூப்பில் 108.40 ஏக்கர் என 775.79 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து சிப்காட் திட்ட அலுவலர் பிரதீப் கூறியதாவது: அரசனூர் சிப்காட் தொழிற் பேட்டைக்கான கட்டமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும். மானாமதுரை சிப்காட் வளாகத்தில் செயல்படாத நிறுவனங்களை வெளியேற வலியுறுத்தியுள்ளோம். புதிய தொழில் தொடங்க 10 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது.

கடந்த பிப்ரவரிக்கு முன்பு வரை ஒரு ஏக்கர் ரூ.5.5 லட்சம். அதில் 50 சதவீதம் மானியம் போக ரூ.2.25 லட்சம் செலுத்தினால் போதும்.

ஆனால் தற்போது ஏக்கர் ரூ.10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் மானியம் போக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்