தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர ணியை அடுத்த வாட்டாத்திக் கொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன்- காந்தி தம்பதி யரின் 2-வது மகள் ஜோதி(19).
இவருக்கும், பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்த மணிகண்டன்(35) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வெளி நாட்டில் வேலை பார்த்து வந்த மணிகண்டன், திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் ஊர் திரும்பியுள்ளார். திருமணத்துக் குப் பிறகு ஜோதி- மணிகண்டன் தம்பதியர் கொண்டிக்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில், பேராவூரணி அருகே ஊமத்தநாடு கிராமத்தில் உள்ள ஜோதியின் உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் ஜோதியும், மணிகண்டனும் சென்றனர். அங்குள்ள கோயிலில் நேற்று அதிகாலை கிடாவெட்டு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கிடாவிருந்து தயாரான நிலையில், அருகேயுள்ள மற்றொரு கோயி லுக்குச் சென்றுவரலாம் எனக் கூறி ஜோதியை மணிகண்டன் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், அவர்கள் வெகுநேரமா கியும் திரும்பி வராததால், உறவினர்கள் தேடிச் சென்றபோது, ஊமத்தநாடு ஏரிக்கரையில் தலை யில் ரத்தக் காயங்களுடன் ஜோதி சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது. ஆனால், அங்கு மணிகண் டனை காணவில்லை. இதுகுறித்து தகவலறிந்த பேராவூரணி போலீ ஸார் அங்கு சென்று, ஜோதியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பேராவூரணி காவல் நிலையத்தில் ஜோதியின் தாய் காந்தி அளித்த புகாரில், தனது மகளை கூடுதல் நகை, பணம் கேட்டு மணிகண்டன் அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும், அவர்தான் தனது மகளை அடித்துக் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக, போலீஸார் தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago