ராயக்கோட்டையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான லாட்டரிச் சீட்டுகளுடன் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை அதிகளவில் உள்ளதாக எஸ்பி சாய் சரண் தேஜஸ்விக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து லாட்டரிச் சீட்டுக்கள் விற்பனையை தடுக்கவும், தொடர்புடையவர்களை பிடிக்கவும் எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு ராயக்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த தஸ்தகீர் (42) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் லாட்டரி சீட்டுகள் அச்சிட்டு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. மேலும், இதில் பாலக்கோடு தேவன் (40), பூபாலன் (26), கிருஷ்ணகிரி நியாமத்துல்லா (62), தேன்கனிக்கோட்டை இப்ராஹிம் கலீல் (32), ஓசூர் முருகேசன் (44) ஆகியோருக்கு தொடர்பு உள்ளது தெரிந்தது.
இதுதொடர்பாக ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து, தஸ்தகீர் உட்பட 6 பேரை கைது செய்தார். மேலும், அவர்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் ரொக்கம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள லாட்டரிச் சீட்டுகள், 10 செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி, தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா ஆகியோரும் விசாரணை நடத்தினர்.
லாட்டரி சீட்டு விற்றதாக தஸ்தகீர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் ரொக்கம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள லாட்டரிச் சீட்டுகள், 10 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago