ரயில் பெட்டிகள் போல மாறிய அரசுப்பள்ளி வகுப்பறை சுவர்கள் :

By எஸ்.கோபு

கரோனா ஊரடங்கு முடிந்து பள்ளிதிரும்பும் மாணவர்களை வரவேற்க பள்ளி வகுப்பறை சுவர்களில், ரயில்பெட்டிகள்போல வரைந்து வண்ணம் தீட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் தயார் செய்துள்ளனர்.

ஆனைமலை ஒன்றியம் பெத்தநாயக்கனூரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான வகுப்பறை சுவர்களில் ரூ.25 ஆயிரம் செலவில் ரயில் பெட்டியைப் போன்று வரைந்து வண்ணம் தீட்டியுள்ளனர். வகுப்பறையின் எண்களை ரயில் பெட்டியின் எண்களாகவும், பள்ளிக்கு வரும் மாணவர்களின் ஊர்களை, ரயில் செல்லும் ஊர்களின் பெயர்களாகவும் வரைந்துள்ளனர். இதனால் ரயிலுக்குள் இருப்பதைப் போன்ற எண்ணம் மாணவர்கள் மனதுக்குள் எழும்.

இதுகுறித்து தமிழாசிரியர் பாலமுருகன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது ‘‘ஊரடங்கு காலத்துக்கு பிறகு அரசுப் பள்ளிக்கு திரும்பும் மாணவர்களை உற்சாகப் படுத்தவும், புதிய மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியாகவும், வகுப்பறைகள் ரயில் பெட்டிகள்போல மாற்றப் பட்டுள்ளன. ரயில் பெட்டிகள், படிக்கட்டுகள், ஜன்னல்கள் என தத்ரூபமாக சுவருக்கு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்