டீசல் விலை குறைப்பு இல்லை : லாரி உரிமையாளர்கள் ஏமாற்றம் :

By செய்திப்பிரிவு

இதுகுறித்து கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசகரும், முன்னாள் தலைவருமான கே.எஸ்.கலியபெருமாள் கூறும்போது, “தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நிதிநிலை அறிக்கையில் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும், டீசல் விலை குறைவதற்கான அறிவிப்புகள் எதுவும் வெளிவராதது ஏமாற்றமே.

தமிழகத்தில் 1.25 லட்சம் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை டீசல் விலை உயர்வு, கரோனா தாக்கத்தால் வாடகை கிடைக்காத நிலை அல்லது கிடைத்தாலும் டிரைவர்கள் ஊதியம், சுங்கக் கட்டணம் ஆகியவற்றின் உயர்வு காரணமாக லாபம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இதனால் லாரி உரிமையாளர்களின் நிலை மோசமாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் வாடகை கட்டணம் உயர்ந்து, விலைவாசி உயரும். பாமர மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். டீசல் விலை குறைந்தால் எங்களுக்கும் ஒரு பெரிய பாரம் குறைந்ததாக இருக்கும். தமிழக அரசு டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால் நல்லது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்