சென்னையைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் நசீர் அகமது. கொளத்தூர் அன்னை சத்யா நகரில் தனது உறவினர் முகமது என்பவரது வீட்டில் முதலாவது மாடி கட்டும் பணியை கடந்த 2011-ம்ஆண்டு மேற்கொண்டார். இந்த கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி மாநகராட்சி உதவி பொறியாளர் பி.சங்கரன் உத்தரவிட்டுள்ளார். பின்னர் கட்டுமானப் பணிகளைத் தொடர சங்கரன் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து நசீர் அகமது லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். முதற்கட்டமாக ரூ. 2 ஆயிரம்லஞ்சம் வாங்கியபோது சங்கரனை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், குற்றம் சாட்டப்பட்ட உதவி பொறியாளர் சங்கரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago