சித்தா பல்கலைக்கழகம் அமைக்க - முதல் கட்டமாக ரூ.2 கோடி நிதி :

By செய்திப்பிரிவு

சித்தா பல்கலைக்கழகம் அமைக்க, முதல் கட்டமாக ரூ.2 கோடி நிதி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பட்ஜெட் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அளிக்கப்படும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துதல், தொற்றாநோய் மற்றும்காயங்களுக்கு சிகிச்சை மேலாண்மையை வலுப்படுத்துதல் மற்றும் பேறுசார் மற்றும் குழந்தை நலத் திட்டத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் மொத்தம் 116.46 கோடி செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை அமைக்க திட்டமிட்டார். அதற்கென, உரிய நிலமும் கண்டறியப்பட்டது. அதற்குப் பின், இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. மற்ற உள்நாட்டு மருத்துவ முறைகளைப் போல் சித்தாவுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக, தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை இந்த அரசு அமைத்திடும். இதற்கென, முதல்கட்ட நிதியுதவியாக ரூ.2கோடி வழங்கப்படும். சுகாதாரத்துறைக்கு மொத்தம் ரூ.18,933.20கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்