பழநியில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கை ஆகும். குறிப்பாக கரோனா காலத்தில் சித்த மருத்துவத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தொற்றில் இருந்து குணமடைந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி பழநியில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க வலியுறுத்தி வாலிபர் சங்கம் சார்பில், பழநி நகரம் முழுவதும் பாத யாத்திரை நடத்தப்பட்டது.
தற்போது திமுக அரசு பட்ஜெட் அறிவிப்பில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய நீண்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். கல்லூரி அமைப்பதற்கான பணி களை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago