இந்நிலையில் மானாமதுரை நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து அரிசி ஏற்றி வந்த லாரியை கிராம மக்கள் நேற்று சிறைபிடித்தனர். அவர்கள் அரிசி மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது அதே பழுப்பு நிறத்துடன் துர்நாற்ற அரிசியே இருந்தது. இதையடுத்து அரிசி மூட்டைகளை இறக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு வந்த மானாமதுரை வட்ட வழங்கல் அலுவலர் ரேவதி, அரிசி மூட்டைகளை இறக்காமல் மீண்டும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கே லாரியை திருப்பி அனுப்பினார். மேலும் தரமான அரிசி விநியோகிக்கப்படும் என அவர் உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago