போலி போலீஸ் அதிகாரி குண்டர் சட்டத்தில் கைது : திண்டுக்கல் ஆட்சியர் நடவடிக்கை

காவல் துறை உதவி ஆணையர் எனக் கூறி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங் களில் வலம் வந்து முக்கியப் பிரமுகர்களை ஏமாற்றிய சென்னையைச் சேர்ந்த விஜ யன்(41) என்பவரை திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி போலீ ஸார் கைது செய்தனர்.

இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. னிவாசன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்நிலையில் விஜயனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் ச.விசாகன் உத்தரவிட்டார். இதை யடுத்து விஜயனை மதுரை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.

தம்பதி மீது குண்டர் சட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூர் அருகே அணைப் பட்டியை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம்(74). இவரது மகன் பொன்னுவேல்(38), மருமகள் சரோஜா(38). இருவரும் சேர்ந்து சொத்து தகராறு காரணமாக ஆறுமுகத்தைக் கொலை செய்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் எஸ்.பி. பரிந்துரைப்படி ஆட்சியர் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பொன்னுவேல், அவரது மனைவி சரோஜா ஆகி யோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்