சிறுமிகளை திருமணம் செய்த : இளைஞர்கள் மீது போக்ஸோ வழக்கு :

By செய்திப்பிரிவு

மதுரையைச் சேர்ந்தவர் விக்னேஷ்பாண்டி (21). இவர், 13 வயது சிறுமியை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார். தற்போது அச்சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். சமூக நல அலுவலர் முத்துலட்சுமி புகாரின் பேரில் விக்னேஷ்குமார், உறவினர்கள் பொன்னி (32), ரமேஷ் (43) உள்ளிட்டோர் மீது போக்ஸோ சட்டத்தில் மதுரை தெற்கு மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விக்னேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம், அனுப்பப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (23). இவர், 16 வயது சிறுமியிடம் நெருங்கிப் பழகினார். அச்சிறுமி கர்ப்பமடைந்தார். ஆண்டிபட்டி போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அருண்குமாரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்