பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் மாபெரும் தூய்மைப் பணி திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் “மாபெரும் தூய்மைப் பணி” திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வசிஷ்டபுரம் ஊராட்சியில் இத்திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தது:
இத்திட்டத்தின் மூலம் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுத்தப்படுத்தப்பட்டு குப்பை, கழிவு நீர் தேங்காத வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இப்பணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் 790 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
தொடர்ந்து, ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வசிஷ்டபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கான புதிய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
அப்போது, கரோனா தடுப்பு மற்றும் சுகாதாரமாக சுற்றுப் புறத்தை பேணி காக்கும் உறுதிமொழியை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள், பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊராட் சிக்குழுத் தலைவர் சி.ராஜேந் திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago