திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி யிலுள்ள காணி பழங்குடியினத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையி ட்டனர்.
பழங்குடியினரின் வாழ் க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத் துடனும், பழங்குடி இளைஞர்களை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட் டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மைலாறு, சேர்வலாறு, அகஸ்தியர் குடியிருப்பு காணி பழங்குடி இளைஞர்களை சீருடைப் பணி, வனப்பணி உள்ளிட்ட பிற அரசு பணிகளிலும், வங்கிப் பணி போன்ற இதரப் பணிகளில் சேர்க்கும் பொருட்டு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் முண்டந்துறை வன அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியர் கடந்த சில நாட்களுக்குமுன் பழங்குடியின திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, காவல் கண் காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரை யாடினர்.
கூடங்குளம் அணு உலைகளை, 29 காணி பழங்குடியின மாணவ, மாணவியர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர். ஒரு நாள் முழுக்க அணுஉலை வளாகத்தில் செலவிட்ட இவர்களுக்கு அணுஉலை தொழில்நுட்ப வல்லுநர்கள், அதிகாரிகள் அணுஉலையின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். அடுத்த வாரத்தில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு செல்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago