புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் - மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசிடம் அனுமதி பெறப்படும் : கிருஷ்ணகிரியில் சுகாதாரத்துறை செயலர் தகவல்

By செய்திப்பிரிவு

புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டில், மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசிடம் அனுமதி பெறப்படும் என கிருஷ்ணகிரியில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் ரூ.338.95 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை, சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி என்கிற அடிப்படையில் 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிகழாண்டில் கட்டுமான பணிகள் முடிந்து மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டுமென, தமிழக முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

தற்போது முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்றவாறு வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், மாணவ, மாணவிகள், விடுதி பேராசிரியர்கள், செவிலியர்கள் விடுதிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு படுக்கை வசதிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதியதாக 11 மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசிடம் அனுமதி பெறப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்