ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் ரூ.14.65 கோடி செலவில் கட்டப்பட்டு, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் நிலையில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் மேற்குப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பழக்கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது, அங்கு சென்ற திமுக எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம், கடைகளை அகற்றக்கூடாது எனக் கூறி அங்கேயே அமர்ந்திருந்ததால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பொக்லைன்களுடன் வந்து ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது, திமுகவின் மாநகர துணைச் செயலாளர் நீலகண்டன், முன்னாள் கவுன்சிலர் மேத்தா உள்ளிட்ட திமுகவினர் வந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் திரும்பிச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago