தமிழக காவல் துறையில் 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்த கடலுார், விழுப்புரம், வேலுார், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமை தாங்கினார். டி.ஸ்பிக்கள் அருள்மணி, திருவேங்கடம் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், 1988 பேட்ச்சில் பணியில் சேர்ந்து உயிரிழந்த கடலுார் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நடராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் காஞ்சிபுரம் சங்கர், செங்கல்பட்டு சந்திரசேகர் ஆகியோர் குடும்பத்திற்கு தலா ரூ.90 ஆயிரம் நிதியுதவி வழங்குவது என முடிவு செய்தனர்.
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராமையா, ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன், சீத்தாபதி, சேதுராமன், ஹபீர்பாஷா, பாஸ்கரன், ரகுநாதன், முருகவேல், பாலதண்டாயுதம், மோகனகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இச்சந்திப்புகான ஏற்பாடுகளை டிராபிக் இன்ஸ்பெக்டர்கள் உளுந்துார்பேட்டை அப்பண்டைராஜ், பண்ருட்டி கோவிந்தசாமி, திருவள்ளூர் லோகநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago