தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்றச் சங்கம், சிவகங்கை கலைமகள் ஓவியப் பயிற்சி மையம் ஆகியவை சார்பில் மாவட்டத்தில் குழந்தைகளின் தனித் திறனை வளர்க்கும் வகையில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 26 மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்தவாறு மே 15 முதல் ஜூலை 1-ம் தேதி வரை 320 ஓவியங்களை வரைந்தனர். அதன் பிறகு இந்த ஓவியங்களை வீதி, வீதியாகச் சென்று விற்பனை செய்தனர். அதில் கிடைத்த ரூ.22,200-ஐ முதல்வரின் கரோனா நிவாரண நிதியாக ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் குழந்தைகள் வழங்கினர். இவர்களை ஆட்சியர் பாராட்டியதுடன், தனித்தனியாக பாராட்டுச் சான்று வழங்கப்படும் எனத் தெரிவித்தார். ஓவியர்கள் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவர் முத்துக்கிருஷ்ணன் உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago