ராமநாதபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆய்வு செய்த ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, அவர்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
ராமநாதபுரம் அருகே காட்டூரணி எம்ஜிஆர் நகர் மற்றும் திருவாடானை அருகே சமத்துவபுரம் பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
காட்டூரணி நரிக்குறவர் மக்கள், தங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். பட்டா, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, சிறுதொழில் தொடங்க கடனுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல, திருவாடானை சமத்துவபுரம் பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்கள், தங்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிய குடும்ப அட்டை, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்கப்படும். பெண்களை குழுக்களாக ஒருங்கிணைத்து சிறுதொழில் பயிற்சி வழங்கி வங்கியில் கடனுதவி பெற்றுத் தரப்படும், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் மாநில அரசின் பசுமை வீடுகள் திட்டம் மூலம் தகுதியான வர்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.
திருவாடானை சமத்துவ புரத்தில் உள்ள 3 நரிக்குறவப் பயனாளிகளுக்கு மாதாந்திர முதியோர் உதவித்தொகை ரூ.1,000 பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago