மன்னார்குடியில் தடையை மீறி செயல்பட்ட 4 நிதி நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
தமிழகத்தில், கரோனா தொற்றின் 2-ம் அலை தீவிரமாக பரவி வருவதை அடுத்து, மே 10-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் மளிகை, காய்கறி உட்பட குறிப்பிட்ட சில கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடைவிதிக்கப்பட்ட கடைகளை திறந்தால், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல ராஜ வீதி, கடைத் தெரு உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி இயங்கிய 4 தனியார் நிதி நிறுவனங்களை, வட்டாட்சியர் தெய்வநாயகி தலைமையிலான அலுவலர்கள் நேற்று பூட்டி சீல் வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago