தென்காசியிலுள்ள தலைமை மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.
இம்மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சை மையத்தில்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள், உணவுகள் குறித்து மருத்துவர்களிடம், ஆட்சியர் கேட்டறிந்தார்.
இம்மருத்துவமனையில் கூடுதலாக 50 படுக்கைகளுடன் பெண் நோயாளிகளுக்கு தனிப்பிரிவு அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தென்காசி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. சில்லரை வியாபாரம் செய்யவும், மொத்தவியாபாரிகளுக்கு தற்போதுஇயங்கி வரும் காய்கறி சந்தையிலேயே வியாபாரம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து வியாபாரிகளிடம் தெரிவித்தார்.
கோட்டாட்சியர் ராமச்சந்திரன், டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன், நகராட்சி ஆணையர் பர்வின், மருத்துவ கண்காணிப்பாளர் ஜெஸ்லின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago