அரியலூர் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து - பதற்ற வாக்குச்சாவடிகளை கண்காணிக்க ஏற்பாடு :

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 753 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன. இதில், பதற்ற மான 193 வாக்குச் சாவடிகளில் சுழலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், இந்த வாக்குச் சாவடிகளில் இன்று(ஏப்.6) நடைபெறும் வாக்குப்பதிவு நடைமுறைகளை அரியலூர் ஆட்சியர் அலுவல கத்தில் இருந்தே கண்காணிக் கலாம். இந்த பணியில் 74 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், வாக்குச்சாவடி களில் மத்திய பாதுகாப்பு படை யினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் பணியில் 53 மண்டல அலுவலர்கள் தலைமையில், ஆசிரி யர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 4,556 பேர் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு பணியில் 1,000-க் கும் மேற்பட்ட போலீஸாருடன், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மத்திய ரிசர்வ் படை, ஊர்க் காவல் படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப் பதிவுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்