வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் - அதிமுக, திமுகவைச் சேர்ந்த 2 பேர் கைது :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட உப்பிலியபுரம் பகுதியில் வாக் காளர்களுக்கு பணம் விநியோகித் ததாக அதிமுக, திமுகவைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உப்பிலியபுரம் அன்பு நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு வாக்க ளிக்க பணம் கொடுப்பதாக வந்த தகவலையடுத்து பறக்கும் படையினர் அந்த பகுதியில் சோதனையிட்டனர். அப்போது, அங்கு திமுகவுக்கு வாக்களிப் பதற்காக வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக தீபன் ராஜ் என்பவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து ரூ.68,550 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, உப்பிலியபுரம் எஸ்.என்.புதூரில் அதிமுகவைச் சேர்ந்த அண்ணாதுரை என்ப வர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தபோது பறக் கும் படையினர் அவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து அதிமுகவினருக்கு பணம் பட்டுவாடா செய்த குறிப்புகள் அடங்கிய நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. உப்பிலியபுரம் போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

பெரம்பலூரில் 2 பேர் கைது...

பெரம்பலூர் மாவட்டம் நெய் குப்பை கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்துக் கொண்டி ருந்த அதே ஊரைச் சேர்ந்த திமுகவினரான சிலம்பரசன்(32), ரவி(52) ஆகியோரை பறக்கும் படையினர் பிடித்து வி.களத்தூர் போலீஸில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.27,430 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கரூரில்...

இதேபோல, கரூர் காந்திகிராமம் பகுதியில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்களின் விவரங்களுடன் ரூ.2.22 லட்சம் ரொக்கம் வைத்திருந்த அதிமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நாகராஜன் என்பவரை பறக்கும் படை அலுவலர் கலையரசி பிடித்து, தாந்தோணிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுதொடர்பாக, நாகராஜன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்