தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 75 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். தொகுதிவாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் விவரம் வருமாறு:
சங்கரன்கோவில் (தனி) தொகுதி
வி.எம்.ராஜலெட்சுமி (இரட்லை இலை), ஈ.ராஜா (உதய சூரியன்), அண்ணாதுரை (பிரஷர் குக்கர்), சுப்பிரமணியன் (தொலைக்காட்சி பெட்டி), பன்னீர்செல்வம் (தீப்பெட்டி), பாலமுருகேசன் (வாளி), பிரபு (மின்கல விளக்கு), மகேந்திரகுமாரி (கரும்பு விவசாயி), மதன்குமார் (கண்காணி ப்பு கேமரா), கணேசன் (மின் கம்பம்), கருத்தபாண்டியன் (ஏசி), குருராஜ் (வைரம்), முத்துகுட்டி (7 கதிர்களுடன் கூடிய பேனா முனை), வள்ளியம்மாள் (விசில்) வெற்றி மாறன் (வாயு சிலிண்டர்).
வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி
டாக்டர் சதன் திருமலைக் குமார் (உதயசூரியன்), அ.மனோ கரன் (இரட்டை இலை), ஈஸ்வரன் (பானை), கருப்பசாமி (கண்காணிப்பு கேமரா), சின்னசாமி (மின்கல விளக்கு), தங்கராஜ் (பிரஷர் குக்கர்), பேச்சியம்மாள் (தொலைக்காட்சி பெட்டி), மதிவாணன் (கரும்பு விவசாயி), ஜெயகுமார் (மோதிரம்), முத்துபாண்டி (மடிக்கணினி), ராமமூர்த்தி (கரும்பலகை).
கடையநல்லூர் தொகுதி
கிருஷ்ணமுரளி (இரட்டை இலை), அம்பிகாதேவி (பேட்டரி டார்ச்), அய்யாத்துரை பாண்டியன் (பிரஷர் குக்கர்), ராஜாராம் (பானை), முத்துலெட்சுமி (கரும்பு விவசாயி), முஹம்மது அபூபக்கர் (ஏணி), எம்.அய்யாத்துரை (நூடுல்ஸ் கோப்பை), ஆர்.அய்யாத்துரை (வாணலி), ஆவணிராஜா (இரட்டை தொலை நோக்காடி), ராதாகிருஷ்ணன் (பணப்பை), ராஜா பொன்னுசாமி (கணினி), கணேசன் (கடிதப்பெட்டி), கிருஷ்ணன் (கட்டில்), சங்கர் (பெட்டி), சிவசுப்பிரமணியன் (வாயு சிலிண்டர்), சீனிவாசன் (தொலைக்காட்சி பெட்டி), பூலோகராஜ் (சாலை உருளை), மாரிதுரைபாண்டியன் (கனசதுரம்), முருகானந்தம் (விளக்கேற்றி), ராஜீ (தள்ளுவண்டி), வேலம்மாள் (புல்லாங்குழல்).
தென்காசி தொகுதி
செல்வமோகன்தாஸ் பாண்டி யன் (இரட்டை இலை), பழனி (கை), உதயகுமார் (தொப்பி), சந்திரசேகர் (தொலைக்காட்சி பெட்டி), சுரேஷ்குமார் (பலாப்பழம்), செல்வகுமார் (டிராக்டர் இயக்கும் விவசாயி), திருமலைமுத்து (மின்கல விளக்கு), முகம்மது (பிரஷர் குக்கர்), முகுந்தன் (கண்காணிப்பு கேமரா), வின்சென்ட் ராஜ் (கரும்பு விவசாயி), ஜெகநாதன் (கண்ணாடி டம்ளர்), ஆரோக்கிய பிரபு (ஆட்டோ ரிக்சா), சொ.கருப்ப சாமி (வாளி), ஆ.பழனிகுமார் (கைப்பெட்டி), பே.பழனிமுருகன் (கப்பல்), மாடசாமி (பட்டாணி), ரமேஷ் (உழவுக்கருவி), ரீகன்குமார் (தீப்பெட்டி).
ஆலங்குளம் தொகுதி
பால் மனோஜ் பாண்டியன் (இரட்டை இலை), பூங்கோதை ஆலடி அருணா(உதயசூரியன்), ராஜேந்திரநாதன் (முரசு), உதயகுமார் (தொலைக்காட்சி பெட்டி), சங்கீதா (கரும்பு விவசாயி), செல்வகுமார் (மின்கல விளக்கு), அருண்குமார் (7 கதிர் களுடன் கூடிய பேனா முனை), சங்கர்கணேஷ் (புல்லாங்குழல்), சிவராம் (கப்பல்), அ.ஹரி (ஹெல்மெட்).முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago