களத்தில் 75 வேட்பாளர்கள், 1,884 வாக்குப்பதிவு மையங்கள் - தென்காசி மாவட்டத்தில் வாக்காளர்களை வரவேற்க தயார் : வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் 13,36,956 வாக்குகள்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் 1,884 வாக்குச்சாவடிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இங்கு 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. சங்கரன்கோவில் தொகுதியில் 15 பேர், வாசுதேவநல்லூர் தொகுதியில் 11 பேர், கடையநல்லூர் தொகுதியில் 21 பேர், தென்காசி தொகுதியில் 18 பேர், ஆலங்குளம் தொகுதியில் 10 பேர் என மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவுக்கு 2 இயந்திரங்கள்

கடையநல்லூர், தென்காசி தொகுதிகளில் 15-க்கும் மேற் பட்டோர் போட்டியிடுவதால் அந்த தொகுதிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் 1,22,906 ஆண்கள், 1,30,399 பெண்கள், மூன்றாம் பாலி னத்தவர்கள் 5 பேர் என மொத்தம் 2,53,310. வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் 365 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன.

வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் 1,18,547 ஆண்கள், 1,22,561 பெண்கள், மூன்றாம்ல பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 2,41,109 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் 336 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன.

கடையநல்லூர் தொகுதியில் 1,43,956 ஆண்கள், 1,45,979 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 5 பேர் என மொத்தம் 2,89,940 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் 411 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. தென்காசி தொகுதியில் 1,43,298 ஆண்கள், 1,48,853 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேர் என மொத்தம் 2,92,168 வாக்காளர்கள் உள்ளனர்.இத்தொகுதியில் 408 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன.

ஆலங்குளம் தொகுதியில் 1,26,278 ஆண்கள், 1,34,144 பெண்கள், மூன்றாம் பாலினத்த வர்கள் 7 பேர் என மொத்தம் 2,60,429 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் 364 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் 6,54,985 ஆண்கள், 6,81,936 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 35 பேர் என மொத்தம் 13,36,956 வாக்காளர்கள் உள்னனர். இவர்கள் தங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்கின்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு, கணினி சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவி பாட் இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 147 வாகனங்களில் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டன.

ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் 143 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை கண்காணிக்க 143 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்குப்பதிவு மையங்களில் 1,584 காவல்துறையினர், 360 துணை ராணுவ வீரர்கள், 250 ஊர்க்காவல் படையினர், கர்நாடக மாநிலத்தில் இருந்து 250 காவல்துறையினர் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1,016 வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

தேர்தல் பணியில் வருவாய்த்துறை ஊழியர்கள் 834 பேர், பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 9,044 பணியாளர்கள், பொது சுகாதாரத்துறையின் மூலம் தன்னார்வ அமைப்புகளிலிருந்து 3,768 பேர் ஈடுபடுகின்றனர். தங்களுக்கு பணி ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு ஊழியர்கள் சென்று தேர்தலுக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.

வாக்குப்பதிவு மையங்கள் 147 மண்டலங்களாக தொகுக்கப்பட்டு, 147 மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டல அலுவலரும் 10 முதல் 15 வாக்குச்சாவடி வரை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். வாக்குப்பதிவு நாளன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்யும் அளவுக்கு உரிய தொழில்நுட்ப வல்லுநர் குழுவும் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாக்களிக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்