கோடை பருவத்துக்கு உகந்த - விதைகளை விற்பனை செய்ய அறிவுறுத்தல் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநர் ரா. ராஜ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிசான பருவ நெற்பயிருக்குப்பின் கோடை நெல், உளுந்து, பருத்தி மற்றும் காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகிறார்கள்.

விதை விற்பனையாளர்கள் சான்று விதைகளில் இரு அட்டைகள் (வெள்ளை அல்லது நீலநிறம்) முறையே சான்றட்டை மற்றும் விவர அட்டை பொருத்தப்பட்ட விதைகளையே விற்பனை செய்ய வேண்டும்.

உண்மைநிலை விதைகளுக்கு விவர அட்டை மட்டும் இருக்கும். விவர அட்டையில் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள், பயிர் செய்ய ஏற்ற பருவம் உள்ளிட்ட 14 வகையான விவரங்கள் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.

விதைகளை விற்பனை செய்யும்போது ரசீது வழங்க வேண்டும். பருவத்துக்கு உகந்த தரமான விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பருவத்துக்கு உகந்த தரமான ரகங்களை பயிர் செய்வதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கும். பருவத்துக்கு உகந்தது அல்லாத ரகங்களை விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்