கரூர் மாவட்டத்தில் - தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 52 குழுக்கள் :

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதி மீறல்களை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழுக்கள், நிலை குழுக்கள், தேர்தல் பிரச்சாரங்களை வீடியோ எடுக்கும் குழுக்கள், தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் விளம்பரங்களை கண்காணிக்கும் குழு, கணக்கீட்டு குழு, உதவி தேர்தல் செலவின பார்வையாளர் குழு உள்ளிட்ட குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கரூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழி தலைமை வகித்து பேசியது:

சட்டப்பேரவைப் பொதுத்தேர் தல் பணிக்காக கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தலா 6 பறக்கும்படைகள், 6 நிலை குழுக்கள், குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் தலா 3 பறக்கும்படைகள், 3 நிலை குழுக்கள், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒன்று வீதம் தேர்தல் பிரச்சாரங்களை வீடியோ எடுக்கும் குழுக்கள், தொலைக்காட்சி விளம்பரங்களை கண்காணிக்கும் குழுக்கள், கணக்கீட்டு குழுக்கள், உதவி தேர்தல் செலவின பார்வையாளர் குழுக்கள் என மொத்தம் 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன. இதில் மொத்தம் 232 பேர் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர். இந்த குழுக்களில் உள்ள அனைவரும் பொறுப்புணர்வு, அர்ப்பணிப்புடன் நேர்மையாகப் பணியாற்ற வேண்டும் என்றார்

வாக்காளர்களுக்கு வாக்கு அளிப்பதற்கு பணமோ அல்லது பொருளோ கொடுப்பது கண்டறி யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப் படும்.

மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத்அலி, அனைத்து குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்