மலைவாழ் பெண்களுக்கு பரிசு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் நிறுவனம் நடத்திய போட்டியில் சிறப்பிடம் பெற்ற 3 மலைவாழ் பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது‘‘தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக்கழகம் சார்பில் 2019-20-ம் ஆண்டுக்கான அடுத்த தலைமுறை கைவினைக் கலைஞர் களுக்கான போட்டி நடைபெற்றது.

இதில் அமராவதி வனப்பகுதிக்குட்பட்ட கரட்டுப்பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள், அய்யம்மாள், தனலட்சுமி ஆகிய 3 மலைவாழ் பெண்கள் சிறப்பிடம் பெற்றனர். இவர்களுக்கு வெள்ளிப் பதக்கமும், ரூ.2000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டு, வனத் துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்