பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, "மே 2021 பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானதனித் தேர்வர்களிடமிருந்து, இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த ஆண்டு நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற, பெறாத தேர்வர்கள், தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மார்ச் 3-ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மார்ச் 8, 9 ஆகிய இரு நாட்களில் அரசு தேர்வுத் துறை சேவை மையத்துக்கு சென்று, தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 சிறப்பு கட்டணம் செலுத்தி, ஆன்லைனில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago