கோவைக்கு பிரதமர் வருகையின்போது பாஜகவினர் கட்அவுட் வைத்தது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் நா.கார்த்திக் எம்எல்ஏ குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கோவை மாநகர் கிழக்குமாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘ஸ்டாலின் தான் வராரு - விடியலை தர போறாரு’ என்றபிரச்சாரப் பாடலை, தொலைபேசி ரிங் டோன் மற்றும் காலர் டியூனாக வைக்க விரும்புவோர், இதற்கான ஸ்டிக்கரில் உள்ள ‘கியூஆர் கோட்’-ஐ ஸ்கேன் செய்து பாடலை பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஸ்டிக்கர் வீடுகள் தோறும் ஒட்டப்படும். 2017-ம் ஆண்டு கோவையில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவின் போது, கட்டப்பட்ட கட்அவுட் சரிந்து, இளைஞர் ஒருவர்உயிரிழந்தார். நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கட்அவுட் வைத்து வருகின்றனர்.

கோவையில் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திரமோடிவருகையின் போதும், தடையை மீறி ஏராளமான கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு கட்அவுட்கள் வைப்பது நீதிமன்றஉத்தரவை அவமதிக்கும் செயல்ஆகும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், நா.கார்த்திக் எம்.எல்.ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்