கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீனாக பணியாற்றிவந்த அசோகன், கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை சமூக மருத்துவத் துறையின் தலைவர் பி.காளிதாஸ், டீன் பொறுப்பை கூடுதலாக கவனித்துவந்தார். இந்நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் டீனாக பணியாற்றிவந்த ஏ.நிர்மலா கோவை அரசு மருத்துவமனையின் புதிய டீனாக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதேபோல, உதகை அரசு மருத்துவமனையின் டீன் மற்றும் சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்துவந்த எம்.ரவீந்திரன், சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago