கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிக்கு பறக்கும் படைகள் உட்பட 42 குழுக்கள் அமைப்பு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில் ரோந்து

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பறக்கும் படை உட்பட 42 குழுக்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில் ரோந்து மேற்கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 2298 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இவற்றில் 286 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இதில் 99 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை ஆகும். மேலும், 1200 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

தேர்தல் பணியில் 14 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். மேலும், பறக்கும் படை உட்பட 42 குழுக்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில் ரோந்து மேற்கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகையை எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து, அரசு கருவூ லத்தில் ஒப்படைக்கப்படும்.

மேலும், அனைத்து தொகுதிகளிலும் நிலையான கண்காணிப்புகுழுக்கள் 24 மணி நேரமும் இயங்கும். அரசு அலுவலகங்களில் தலைவர்களின் புகைப்படங்கள், அரசு விளம்பரங்களை அகற்றவும், அரசு கட்டிடங்கள், சாலை மேம்பாலங்கள், பொது இடங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தின் போதும், வாக்களிக்கும் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும், கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திர, கர்நாடக மாநில எல்லையில்உள்ளது. இங்கு ஏற்கெனவே மாநில எல்லைப் பகுதிகளில் 9 இடங்களில் சோதனைச்சாவடிகள் உள்ளன. கூடுதலாக ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் எல்லைகளில் மேலும் தலா 8 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும்நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும் இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்