கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட 42 ஆயிரத்து 266 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கூறும் போது, ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 15 லட்சத்து 99 ஆயிரத்து 18 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 13 ஆயிரத்து 723 மாற்றுத் திறனாளி வாக்காளர்களும், 80 வயதுக்கு மேற்பட்ட 28 ஆயிரத்து 543 வாக்காளர்களும் உள்ளனர். மாற்றுத் திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட 42 ஆயிரத்து 266 வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தபால் மூலம் வாக்காளிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago