மதகொண்டப்பள்ளி பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோயில் தேர்த் திருவிழாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து திரண்ட பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மதகொண்டப்பள்ளி கிராமத்தில் பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோயில் உள்ளது. இங்கு தேர்த் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ரத உற்ஸவ தினமான நேற்று பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. மதியம் ரத உற்ஸவம் நடைபெற்றது. தேரில் பட்டாடை உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கட ரமணசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர்த் திருவிழாவில் பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயில் செயல் அலுவலர் நா.ஜோதி, சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago