தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் கார்த்திகேயன் தலைமையேற்றார்.
மேலும், அவர் அறிவியல் சார்ந்த பல்வேறு தகவல்கள் குறித்து பேசினார். இயற்பியல் துறை தலைவர் முனைவர் சங்கீதா வரவேற்றார். தமிழ்த் துறை தலைவரும், பெரியார் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினருமான முனைவர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவியரின் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியும், பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டது. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை முனிராஜ், ஜோதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தங்கராசு நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago