பொறியியல் மேற்படிப்புகளுக்கான ‘கேட்’ தேர்வின் விடைக்குறிப்பை மும்பை ஐஐடி வெளியிட்டுள்ளது.
ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ‘கேட்’ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
மொத்தம் 100 மதிப்பெண்களை கொண்ட இந்த தேர்வு, இயந்திரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட 28 பாடப்பிரிவுகளில் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான ‘கேட்’ தேர்வு பிப்ரவரி 5, 6, 7, 12, 13, 14-ம் தேதிகளில் பாடவாரியாக நடைபெற்றது. இந்த தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு பட்டியலை மும்பை ஐஐடி நேற்று வெளியிட்டது. அதன் விவரங்களை www.gate.iitb.ac.in என்ற வலைத்தளத்தில் பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம்.
இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை உரிய ஆதாரங்களுடன் மார்ச் 2 முதல் 4-ம் தேதி வரை தெரிவிக்கலாம். இதற்காக ஒவ்வொரு மறுப்பு விடைக்கும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வர்கள் கூறிய ஆட்சேபனைகள் ஏற்கபட்டால் கட்டணத் தொகை முழுவதும் திருப்பி அளிக்கப்படும். தொடர்ந்து இறுதி விடைக்குறிப்பு மார்ச் 18-ம் தேதி வெளியிடப்படும். அதன்பின் தேர்வு முடிவுகள் மார்ச் 22-ம் தேதி வெளியாகும் என்று மும்பை ஐஐடி தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago