சாத்தூர் அருகே உள்ள குமரரெட்டியாபுரத்தைச் சேர்ந் தவர் ராமகிருஷ்ணன். வீட்டில் சேவு, மிக்சர் ஆகியவற்றை தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார்.
3 ஆண்டுகளுக்கு முன் உணவுப் பாதுகாப்பு அலு வலர் மோகன்குமார் ஆய்வு செய்தபோது மிக்சரில் கலப்படம் இருப்பது கண்ட றியப்பட்டது.
இது தொடர்பாக சாத்தூரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வியாபாரி ராமகிருஷ்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் பாது காப்பற்ற உணவுப் பொருள் தயார் செய்ததற்காக ரூ.50 ஆயிரம், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து நீதித்துறை நடுவர் சரவண செந்தில்குமார் தீர்ப்பளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago